பாராட்டுக்குரிய மாணவர்கள்
குமரி மாவட்டம், நாகர்கோவில் முதலியார் விளையைச் சேர்ந்த டி.வி.டி. பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு தமிழரசன் (12) 4ஆம் வகுப்பு தினேசு (9) ஆகிய மாணவர்கள் 7.3.08 வெள்ளி வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் டி.வி.டி. காலனி பகுதியில் ரூ. 50, ரூ. 100, ரூ. 500 நோட்டுகள் கேட்பாரற்று சிதறிக் கிடந்தன. இந்த தொகை ரூ. 6400யை மாணவச் செல்வங்கள் எடுத்து, யாராவது வந்து கேட்டால் கொடுங்கள் என பக்கத்திலுள்ள டீ கடையில் கொடுத்து விட்டு பள்ளிக்குச் சென்றார். மறுநாள் வரை யாரும் வராததால் பணத்தை கோட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவர்களின் நல்லெண்ணத்தை குமரி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார், துணை கண்காணிப்பாளர் சந்திரபால் ஆகியோர்கள் பாராட்டினார்கள். வாழ்க மாணவச் செல்வங்கள்.
- எஸ். நல்லபெருமாள் |