நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க

உலகக் கோப்பை

கிரிக்கெட்டில் வென்ற அய்ன்ஸ்டீன்

நம் பெரியார் தாத்தா வளர்த் தெடுத்த இந்த திராவிடர் கழகம் அனைவராலும் அறிவியக்கம் என்று புகழப்படுகிறதல்லவா? அதற்கென்ன காரணம் தெரியுமா? பகுத்தறிவையும், படித்து உயர வேண்டும் என்ற உணர்ச் சியையும் வளர்த்தது இந்த இயக்கம் தான். அதுமட்டுமல்ல, உலகப் பேரறிஞர்கள், பகுத்தறிவாளர்கள், புரட்சியாளர்கள், அறிவியலாளர்கள் போன்றோரை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ததும் திராவிடர் இயக்கம்தான்.
இப்போது பெரியார் பிஞ்சு இதழில் அறிவியலாளர் பற்றியும் புதிய கண்டு பிடிப்புகள் பற்றியும் வருவது போல முந்தைய கால குடிஅரசு, மன்றம், திராவிட நாடு போன்ற இதழ்களில் எல்லாம் செய்திகள் வெளிவந்தன. திராவிட இயக்க மேடைகளையெல்லாம் மாலை நேரக் கல்லூரிகள் என்றழைப் பார்கள். அந்தளவுக்கு அறிவூட்டின அவை.
அப்படித்தான் அறிவியலாளர்கள் மற்றும் புரட்சியாளர்களின் பெயரை பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்த்தார் பெரியார் தாத்தா. லெனின், சாக்ரடீசு, இங்கர்சால், பிராட்லா, புருனோ, எடிசன், ஸ்டாலின், டார்வின் என்ற பெயர்கள் தமிழகமெங்கும் இப்படி நினைவு கூறப்பட்டன. அதுமட்டுமல்ல, பழனி, திருப்பதி என்று கோயில் இருக்கும் ஊர்களின் பெயர்களை வைத்தவர்கள் மத்தியில் பொதுவுடைமைப் புரட்சியால் புத்துலகம் படைத்த ரஷ்யாவை நினைவூட்டும் விதமாக ரஷ்யா என்றும் மாஸ்கோ என்றும் பெயரிட்டார் பெரியார் தாத்தா. எனவே இந்தப் பெயர்க ளெல்லாம் தனிக் கவனம் பெற்றன. தூய தமிழ்ப் பெயர்களாயிருந்தாலும் அறிவை முன்னி லைப்படுத்தி பெயர் வைத்தவரல்லவா பெரியார் தாத்தா. அந்த வழக்கம் அவரைப் பின்பற்றிய அனைவருக்கும் வந்தது.
காத்தன், சுடலை, இருளாண்டி, மூக்கன் என்றும், சமஸ்கிருத மோகத்தால் பானை வயிறுக்காரன் என்று பொருள்படும் தாமோதரன் என்றும், மயிரான் என்று பொருள்படும் கேசவன் என்றும் பெயர்களை வைத்துக் கொண்டிருந்த வர்கள் மத்தியில் தன்னம்பிக்கை தரும் பெயர்களை வைத்து அவர்களை ஊக்கப்படுத்துவதும் அதன் நோக்கமல்லவா?
அப்படிப் பெயர் வைக்கப்பட்ட ஒரு பெரியார் பிஞ்சு, 2008 உலகக் கோப்பை கிரிக் கெட்டில் (19 வயதுக்கு உட்பட்டோருக்கானது) விளையாடி, கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒருவராக இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
மலேசியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, கோப்பையை வென்று வந்த அணியில் இடம்பெற்றவர் அய்ன்ஸ்டீன் நெப்போலியன், தமிழக அணியில் இவர் காட்டிய அசாத்திய திறமை காரணமாக இவர் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
மலேசியாவில் நடைபெற்ற போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தாலும், அதிலும் தன் திறமையை நிறுவியிருக்கிறார் இந்தப் பெரியார் பிஞ்சு. தங்கள் அணியின் பயிற்றுநர் தாவ் வாட்மோர் தரும் ஊக்கமே தன்னை இன்னும் துணிவுடன் விளையாடச் செய்வதாகக் கூறுகிறார் அயன்ஸ்டீன்.
ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி யிருந்தாலும் புகழ்பெற்ற கிரிக்கெட் போட்டி வர்ணணையாளர் ஆலன் வில்கின்ஸ் உள்பட பலரின் பளிச் கவனத்தையும் பெற்றது அய்ன்ஸ்டீன் நெப்போலியனின் பெயர்தான். இந்தியாவிலிருந்து இப்படி ஒரு பெயரா என்று எல்லோரும் வியந்திருக்கிறார்கள்.
எப்படி உங்களுக்கு இந்த பெயர் வைத்தார் கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது மிகவும் தெளிவாக பதில் தந்திருக்கிறார் அய்ன்ஸ்டீன்.
நாங்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள், பகுத்தறிவாளர்கள். மற்றவர்கள் ராமா, கிருஷ்ணா என்று கடவுள் பெயர் வைப்பார்கள். எங்கள் வீட்டில் அய்ன்ஸ்டீன், நெப்போலியன் என்று புகழ்பெற்ற மனிதர்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள் என்று நச் சென்று கூறியிருக்கிறார்.
இவ்வளவு தெளிவாகப் பேசும் பிஞ்சு யாரவர்? அறிய ஆவலாய் இருக்கிறதா? அய்ன்ஸ்டீன் அவரது பெயர். நெப்போலியன் அவரது தந்தை பெயர். இவர்களது குடும்பமே பகுத்தறிவுக் குடும்பம். அதைப்பற்றி அய்ன்ஸ்டீன் கூறுகிறார் கேட்போமா? எனது ஒரு தாத்தா, அதாவது அம்மாவின் அப்பா பூண்டி குமாரசாமி என்று அனைவராலும் அறியப்பட்ட புகழ்பெற்ற பொறியாளர். தந்தை பெரியாரோடு நெருங்கிப் பழகியவர். அவரது சீடராக கொள்கை வழி நின்றவர். அவர் ஒரு விஞ்ஞானியும் கூட.
ஒரு முறை புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனுக்குக் கடிதம் எழுதி அவரும் என் தாத்தாவுக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார். என் அம்மாவும் இயற்பியல் ஆசிரியர். அதனால் அய்ன்ஸ்டீனின் மேல் ஒரு பற்று உண்டு. எனவே எனக்கு அந்தப் பெயரிட்டார்கள்.
சரி, அப்போ நெப்போலியன்?
அப்போ நெப்போலியன் இல்லை. என் அப்பா தான் நெப்போலியன். இவரும் பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்தவர்தான். எனது மற்றொரு தாத்தாவான (அப்பாவின் அப்பா) குருசாமி, தந்தை பெரியாரிடம் புகைப்படக்காரராக இருந்தவர். பாட்டி பெயர் மாஸ்கோ. இப்படி நான் உள்பட எங்கள் குடும்பமே பகுத்தறிவுக் குடும்பம் என்கிறார் அய்ன்ஸ்டீன் நெப்போலியன்.
பெயருக்காக மட்டுமல்லாமல் தற்போது தன் விளையாட்டுத் திறமைக்காகக் கவனிக்கப் பட்டிருக்கிறார் அய்ன்ஸ்டீன். ஆம், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நடத்தும் 20-20 போட்டியில் சென்னை அணி சார்வில் தோனி தலைமையில் விளையாட இருக்கிறார் அய்ன்ஸ்டீன்.
நமது பெரியார் பிஞ்சுகளில் ஒருவராக இருந்து இன்று வெற்றிச் சிகரத்தை தொடப்போகும் அய்ன்ஸ்டீனுக்கு நாமும் நம் வாழ்த்துகளைக் குவிப்போமே!

-பிஞ்சண்ணா