அறிவியல் ஆய்வு
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
தேவையான பொருள்: மெல்லிய நீளமான காகிதம் ஒன்று
செய்முறை: வலது கையால் காகிதத்தின் ஒரு முனையை பிடித்துக் கொள்ளவும். இப்போது வாயின் அருகில் காகிதத்தை பிடித்துக் கொண்டு படத்தில் உள்ளது போல் ஊதவும்.
காண்பன: தொங்கிக் கொண்டிருந்த காகிதம் மேல் நோக்கி வரும்
காரணம்: நாம் வாயால் ஊதுவதன் மூலம் கை பிடித்திருக்கும் பகுதியில் உள்ள காற்றை வேகமாக தள்ளி விடுகின்றோம். இதனால் குறைந்த காற்றழுத்தம் ஏற்படும். இதனை நிரப்ப அனைத்து பகுதியிலும் உள்ள காற்று வரும். நாம் தொடர்ந்து ஊதுவதால் மேல் காற்று இதனுடன் சேர்ந்து சென்று விடும். அதே நேரம் காகிதத்திற்கு கீழ் பகுதியில் உள்ள காற்று நிரப்ப வரும். ஆனால் பேப்பர் இடையில் இருப்பதால் பேப்பரை தள்ளிக் கொண்டு மேலே வரும். இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்கும் காகிதம் மேலே வருகின்றது. |