நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க

மனித இன வரலாறு-38 - ஜப்பான்

- மு.நீ.சிவராசன்

கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் உலகின் பிற பகுதிகளிலிருந்து பெருந்தொலைவிலுள்ள நாடாக இருந்தது. நீண்ட காலமாக மக்கள் யாரும் உலகின் பிற பகுதிகளிலிருந்து இத்தீவுகளுக்குச் செல்லவில்லை. கி.பி. 550க்குப் பிறகே இத்தீவுகளின் மீது அண்டை நாடான சீனாவின் பார்வை பட்டது.
பௌத்தத் துறவிகள், பௌத்த மதத்தை ஜப்பானின் தேசிய மதமாக ஆக்குமாறு ஜப்பானியப் பேரரசரைப் வேண்டினர். சீனாவின் கல்வியாளர்கள் சீனமொழியை படிக்கவும், எழுதவும் ஜப்பானியர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.
இளவரசர் ஷோட்டோக்கு (Shotoku) ஜப்பானில் புத்த மதத்தைப் பரப்பினார். இவர் நாரா (Nara) என்ற இடத்தில் ஹோர்யூ-ஜி (Horyu-Ji) என்ற ஏழு அடுக்குகள் கொண்ட புத்த மத வழிபாட்டுக் கோயிலையும், பௌத்த மடாலயத் தையும் கட்டினார். (கி.பி. 601-607). அக்கோயிலில் ஆயிரக் கணக்கான கலைச் செல்வங்கள் பாதுகாக்கப் பெற்றுள்ளன. ஜப்பானில் இப்பௌத்த மடாலயமே மிகப் பழைமையானது, இக்கோயிலின் ஒவ்வொரு அடுக்கிலும் புத்தர் பயன்படுத்திய அல்லது அவருடன் தொடர்புடைய நினைவுச் சின்னம் (nelic) ஒன்று உள்ளதாகக் கூறப்படுகிறது. கி.பி. 670இல் நிகழ்ந்த தீ விபத்திற்குப் பின்னர் இது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இன்றளவும் வாழ்ந்து கொண்டுள்ளது.
மேலும் இவ்விளவரசர் சீனாவில் இருப்பது போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினார். கி.பி. 800 வரை ஜப்பானியர் வாழ்க்கை சீனர்களின் வாழ்வைப் போன்றே இருந்தது.
படம் விளக்கம்:
1. ஏழு அடுக்கு ஹோர்யூ-ஜி பௌத்த கோயில்
(முன்பக்கம்)
2. இளவரசர் ஷோட்டோக்கு (Sho Toku)
(முன்பக்கம்)