உயர்வே என்றும்!
- மன்னர்மன்னன்
மனுவின் மொழி
அறமான தொரு நாள் - அதை
மாற்று நாளே
தமிழர் திருநாள்!
இனிமையாய்ப் பாவேந்தர்
இதனை அன்றே சொன்னார்!
நினைவிலே வைத்திரு தம்பி
நேர்மையே நமது பாதை!
சாதிக் கொரு நீதியென்றும்
சமயத்துக் கொரு நீதி யென்றும்
ஏதுக்குத் தமிழர் தம் நாட்டில்
என்றார் நம் தந்தை பெரியார்
சாதி எனும் சொல்லே என்றும்
தமிழினும் எங்கும் இருந்ததில்லை!
ஓதிடும் நம் வள்ளுவர் குறளே
உயர்தமிழர்க்கு வாய்த்த நீதி!
மனிதரின் உயர்வேது தாழ்வேது?
மானுடமே தழைத்தல் வேண்டும்
மனத்தினில் அன்பு அறம் வேண்டும்
நினைத்திடில் தம்பி, உயர்வே என்றும்! |